Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2523 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2523திருவிருத்தம் || 46
மடநெஞ்ச மென்றும் தமதென்றும், ஓர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ அமையும்அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று தாறும் திரிகின்றதே.
மடம் நெஞ்சம் என்றும், Madham Nenjam Endrum - பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும் (- (ஏனெனில்))
தமது என்றும், Thamathu Endrum - நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி, Oru Karumam Karuthi - ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார், Nenjaivida Utrar - மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும், Vidavo Amayum - அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
அ பொன் பெயரோன், A Pon Peyron - அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம், Tada Nenjam - பெரிய மார்பை
கீண்ட, Keenda - எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது, Piranar Thamadu - பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ், Adikizh - திருவடிகளிலே
விட, Vida - (யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட  (அது)
போய், Poi - விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய், Thidam Nenjam Aay - உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து, Emmai Neethu - (தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும், Indru Tharum - இன்றுவரையில்
திரிகின்றது, Thirigindrathu - (அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.