| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2524 | திருவிருத்தம் || 47 | திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே | வடமாருதம், Vadamarudham - வாடைக்காற்று (- (ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)) திரிகின்றது, Thirigindrathu - உலாவுகிறது; திங்கள், Thingal - (குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம் வெம் தீ, Vem Thi - கொடியநெருப்பை முகந்து சொரிகின்றது, Mugandhu Sorikindrathu - வாரியிறைக்கின்றது: அதுவும் அது, Adhuvum Adhu - முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது; கண்ணன், Kannan - கண்ணபிரானுடைய விண் ஊர், Vin Oor - பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை தொழவே, Thozhave - இடைவிடாது தொழுது அநுபவிக்கவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே சங்கம், Sangam - (கையிலணிந்துள்ள) சங்குவளை. சரிகின்றது, Sarigindrathu - கழன்று விழுகின்றது; தண் அம் துழாய்க்கு, Than Am Thuzhaykku - (அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால் முழு மெய்யும், Muzhu Meyyum - உடம்பு முழுவதிலும் வண்ணம் பயலை விரிகின்றது?, Vannam Payalai Virigindrathu - (இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம்பரப்புகின்றது (இனி) என் மெல்லியற்கு, En Melliyarku - மென்மையான தன்மையையுடைய என் மகளுக்கு என் ஆம் கொல், En Aam Kol - யாதாய் முடியுமோ. |