திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2527 | திருவிருத்தம் || 50 | ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே. | பதவுரை Show / Hideவலவ, Valava - பாகனே! (- (எவ்வித்திற்கு? என்றால்)) ஒன்நுதல், Onnudhal - அழகிய நெற்றியையுடையவளான நாயகியின் மாமை ஒளி, Mamai Oli - மேனி நல்நிறத்தின் விளக்கம் பயவாமை, Payavamai - பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!) நம் தேர், Nam Ther - நமது தேர் விரைந்து நண்ணுதல் வேண்டும், Virainthu Nannudhal Vendum - துரிதமாகச் சென்று சேர வேண்டும்; தேன் நவின்ற, Then Navinra - வண்டுகள் பாடப்பெற்ற விண் முதல் நாயகன் நீள் முடி, Vin Mudhal Nayagan Neel Mudi - பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த வெள் முத்தம் வாசிகைத்து ஆய், Vel Muththam Vaasikaithu Aai - வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய் மண்முதல் சேர்வு|ற்ற, Manmudhal Seruvattr - (முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான அருவி, Aruvi - நீர்ப்பெருக்கை செய்யா நிற்கும், Seyyaa Nirkum - செய்து நிற்கிற மா மலைக்கு, Maa Malaikku - பெரிய திருமலைக்கு இன்று கடாக, Indru Kadaaka - இப்பொழுது (தேரை)நடத்துவாயாக |