திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2529 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2529திருவிருத்தம் || 52
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய் மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய் அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.
பதவுரை Show / Hide
அழைக்கும், Alaikkum - (அன்போடு) அழைக்கிற
கருகடல், Karugadal - (தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வௌ திரை கை, Vau Thirai Kai - (தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய், Kondo Poi - எடுத்துக்கொண்டுபோக,
விண்வாய், Vinvaai - ஆகாயத்திலே
புலம்பி அழைத்து, Pulambi Azhaitthu - (மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும், Mulai Malai Mael Nindrum - (தனது) ஸ்தனங்களாகிய மலைகளின்மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை, Alar Vaai Mazhai Kan Madanthai - தாமரமைலரில் வாழ்பவளும் மழைபோலக் குளிர்ந்த கண்களையுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற, Aravu Anai Aera - (அப்பாற் கடலினிடையிற் பள்ளிகொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,  (அது கண்டு)
மண் நாதர், Man Naadhar - பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய், Aarugal Aayi - ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர், Mazhai Kanna Neer - மழையாகிய கண்ணீரான்றி
திருமால் கொடையான் என்று, Thirumaal Kodaiyaan Endru - திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது, Vaarkindrathu - பெருகுகிறது.