திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2530 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2530திருவிருத்தம் || 53
வாரா யினமுலை யாளிவள் வானோர் தலைமகனாம், சேரா யினதெய்வ நன்னோயிது தெய்வத் தண்ணந்துழாய்த் தாரா யினும்தழை யாயினும் தண்கொம்ப தாயினும்கீழ் வேரா யினும்நின்ற மண்ணாயி னும்கொண்டு வீசுமினே.
பதவுரை Show / Hide
வாரா ஆயின முலையான, Vaaraa Aayin Mulaiyaan - கச்சுப்பொருந்திய தனத்தையுடையவளான (- (இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;) (கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்))
இவள், Ival - இப்பராங்குச நாயகியினுடைய
இது, Idhu - இந்த நோயானது
வானோர் கலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய், Vaanor Kalaimagan Aam Seer Aayin Deivam Nalnoy - தேவாதி தேவனான திருமாலினது தகுதியான திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
தெய்வம், Deivam - திய்வமான
தண், Than - குளிர்ந்த
அம், Am - அழகிய
துழாய் தார் ஆயினும், Thuzhai Thaar Aayinum - (அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும், Thazhai Aayinum - (அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும், Than Kombu Adhu Aayinum - குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும், Keelveer Aayinum - கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும், Nindra Man Aayinum - (அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்