Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2531 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2531திருவிருத்தம் || 54
வீசும் சிறகால் பறத்திர் விண்ணாடு நுங்கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே!
நெய், Ney - (திருவாய்ப்பாடியிலே) நெய்யை (- (எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது) பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும்.))
தொடு உண்டு, Thodu Undu - கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி, Aesumpadi - (பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும், Anna Seyyum - (மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச்  செய்தருளிய
எம் ஈசர், Em Eesar - எமது தலைவரும்
விண்ணோர் பிரானார், Vinnor Piranaar - (மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ், Maasu Il Malar Adi Keel - குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும், Emmai Seruvikkum - எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே, Vandugalai - ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்திரி, Veeseum Siragal Parathiri - வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது, Vin Naadum Thungattu Elidhu - (அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;