| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2532 | திருவிருத்தம் || 55 | வண்டுகளோ! வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ, உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம், ஏனமொன்றாய் மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல் விண்டுகள் வாரும், மலருள வோநும் வியலிடத்தே? | வண்டுகளோ, Vandugaloo - வண்டுகளே! வம்மின், Vammin - வாருங்கள்; நீர் பூ, Neer Poo - நீரிலுண்டாகிற பூவும் நிலம் பூ, Nilam Poo - நிலத்திலுண்டாகிற பூவும் மரத்தின் ஒண்பூ, Marathin Onpoo - மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும் உண்டு, Undu - (தேனைக்) குடித்து களித்து, Kalithu - களிப்படைந்து உழல்வீர்க்கு, Uzhalveerkkum - (எங்கும்) திரிகிற உங்களுக்கு ஒன்று உரைக்கியம், Onru Uraikiyam - (யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம். ஏனம் ஒன்று ஆய், Eyanam Onru Aay - ஒப்பற்ற வொரு வராஹமூர்த்தியாய் நண் துகள் ஆடி, Nand Thugal Aadi - பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய வைகுந்தம், Vaikundham - பரமபதத்தை அன்னாள், Annala - ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய குழல்வாய், Kuzhalvaai - கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள விரைபோல், Virai Pool - பரிமளம்போல விண்டு, Vindhu - மலர்ந்து மணம் வீசி கள் வாரும், Kal Vaarum - தேன் பெருகப்பெற்ற மலர், Malar - பூக்கள் தும் வியல் இடத்து, Dhum Viyal Idathu - உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே உளவோ, Ulavo - இருக்கின்றனவோ? |