திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2533 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2533திருவிருத்தம் || 56
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால், உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழிஓர் தண்தென்றல்வந் தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின் தேன் புயலுடை நீர்மையி னால் தடவிற்றென் புலன்கலனே.
பதவுரை Show / Hide
வியல், Viyal - விசாலமான
இடம், Idam - உலகங்களை
உண்ட, Unda - திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார், Piranar - பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த, Vidutha - (எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால், Thiru Arulal - சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று, Uyil Idempetru - உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தம், Uyandham - வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம், Anjalam - (இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி, Thozhi - வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து, Or Than Thendral Vandu - ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர், Ayilidai Yaarum Arindhilar - அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன், Am Poo Thuzhayin In Then - அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனியதேன்துளிகளை
புயலுடை நீர்மையினால், Puyaludai Neermaiyinal - மழைதுளித்தல் போலத் துளிக்குந்தன்மை யுடையதாய்
என், En - என்னுடைய
புலன், Pulan - அவயவங்களிலும்
கலன், Kalan - ஆபரணங்களிலும்
தடவிற்று, Thadavitru - ஸ்பர்சித்தது