திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2535 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2535திருவிருத்தம் || 58
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய் நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா அழறலர் தாமரைக் கண்ணன்என் னோவிங் களக்கின்றதே?
பதவுரை Show / Hide
ஒன்றே, Ondrae - ஒரு திருவடியிடமே
ஆயிற்று, Aayitru - பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது; மற்றொரு திருவடி
முழுதாயிற்று, Muzhudhaayitru - (பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர், Uzhalru Alar - உலகுங்செல்லவல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய், Gnanaththu Sudar Aay Vilakkai - ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரை இல்ல, Uyarnthorai Illa - (தன்னிலும்) மேற்பட்டவரையுடையவனல்லாதவனும்
நிழல் தர, Nizhal Thara - நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும், Ella Visumbum - ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது, Niraindhathu - வியாபித்தது
நீண்ட அண்டத்து, Neenda Andhathu - அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன், Azharu Avar Thamarai Kannan - சேற்றில் மலர்ந்த செவ்விமாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ, Ingu Alakkindrathu Enno - இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?