| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2536 | திருவிருத்தம் || 59 | அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர் வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன் தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே. | வல்வினையேன், Valvinaiyen - கொடிய தீவினையையுடைய எனது தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை, Thala Peru Neel Muruvai Seyyavaya Thadamulai - முல்லையரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல்வரிசையை யுடைய சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களையுடையவளாகிய இப்பெண்பிள்ளை (என்ன சொல்லுகிறாளென்றால்) அளப்பு அரு தன்மைய, Alappu Aru Thanmaiya - “அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய ஊழி, Oozhi - கற்பங்களினும் அம், Am - அழகிய (நீண்ட) கங்குல், Gangul - இராப்பொழுதுகள் அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன், Am Thannam Thuzhaykku Ulam Peru Kaadhalin Neeliy Aay Un - அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன. ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன், Ongu Munneer Valam Peru Naadan - உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன் மதுசூதனன், Madhusoodhanan - மதுவென்னும் அசுரனையழித்தவன் என்னும், Ennum - என்று வாய்விட்டுச் சொல்லியலற்றுகிறாள். |