திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2537 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2537திருவிருத்தம் || 60
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும், கடல்மண்ணெல்லாம் விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பரமே பெருமான் மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே.
பதவுரை Show / Hide
முலையோ, Mulaiyo - ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில், Muzhu Mutrum Ponthil - மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல், Moy Poo Kuzhal - அடர்ந்த மென்மையான தலைமயிர்கள்
குறிய, Kuriya - (முடிகூடாமல்) குட்டையுள்ளன;
கலையோ, Kalaiyo - அடையோ வென்னில்
அரை இல்லை, Arai Illai - இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ, Naavo - நாக்கோவென்னில்
குழறும், Kuzharum - (திருத்தமாக வார்த்தை சொல்லமாட்டாமல்) குதலைச்சொல்  பேசுகின்றது.
கண், Kan - கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என, Kadal Mann Ellam Vilaiyo Ena - கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப்பொருளோவென்று சொல்லும்படி
மிளிரும், Milirum - (ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான்மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்., Perumanmalaiyo Thiruvaengadam Endru Karkindra Vaasagam - ‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள்  பரமே, Ival Parame - (இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.