திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2538 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2538திருவிருத்தம் || 61
வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம் நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும் வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால் தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
பதவுரை Show / Hide
தொல்லை வானவர் தம் நாயகன், Thollai Vaanavar Tham Naayagan - பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன், Naayakar Ellam Thozhumavan - ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும், Njaalam Mutrum - உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை, Veiy Aham Aayinum Soora Vagai - ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன், Irande Adiyal Thaayavan - (தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம் இதை, Nam Idai - நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று, Aay Kulam Aay Vandhu Thonrirru - இடையர் குலத்தையுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்துவளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது, Vaasagam Seivathu - எடுத்துப்புகழ்ந்து கூறுவது
நம்பரமே, Nambaramai - நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)