| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2539 | திருவிருத்தம் || 62 | இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது, அறையோ எனநின் றதிரும் கருங்கடல், ஈங்கிவள்தன் நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால் முறையோ? அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே. | இரக்கினும், Irakkinum - எவ்வளவு வேண்டிக் கொண்டாலும் (- (காப்பு அரிது)) ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது, Oru Penpaal Enavum Eengu Irai Irangadhu - இவள் ஒரு பெண் மகளென்று கருதியும் இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல் கரு கடல், Karud Kadal - கரியகடலானது அறையோ என நின்று அதிரும், Araiyoo Ena Nindru Adhirum - (இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும் நிலைநின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது; ஓ, O - இஃது ஒரு கொடுமையே அரவு அணைமேல், Aravu Anaimel - சேஷசயனத்தின் மீது பள்ளிகொண்ட, Pallikonda - சயனித்தருளா நின்ற முகில் வண்ணனே, Mugil Vannane - காளமேகம் போன்ற வடிவுடையவனே! ஈங்கு, Eengu - இவ்விடத்தில் இவள்தன், Ivalthan - இவருளுடைய நிறையோ, Niraiyo - நினைக்குணமோவென்னில், இனி, Ini - இனிமேல் உன் திருஅருளால், Un Thiruarulaal - உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்) அன்றி, Andri - பாதுகாத்து வைக்க முடியாது; முறையோ, Murayo - (இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ? |