திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2540 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2540திருவிருத்தம் || 63
வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய, தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற் கெண்ணம் புகுந்துஅடி யேனொடிக் கால மிருகின்றவே.
பதவுரை Show / Hide
வண்ணம் சிவந்துள, Vannam Sivanthula - திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் வழிய, Vaan Naadu Amarum Kulir Vazhiy - பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையையுடைவையும்
தண் மெல் கமலம் தடம்போல் பொலிந்தன, Than Mel Kamalam Thadampol Polinthana - குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம்போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம், Ivaiyo Tham - இத்திருக்கண்களோ
கண்ணன், Kannan - கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால், Thirumaal - திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும், Thirumugam Thannodum - திருமுகமண்டலத்திலே
காதல் செய்தேற்கு, Kaadhal Seitherkku - வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம், Ennam - மனத்திலே
புகுந்து, Pugunthu - பிரவேசித்து
இ காலம், I Kaalam - இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற, Adiyenodu Irukkindra - (விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.