திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2541 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2541திருவிருத்தம் || 64
இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.
பதவுரை Show / Hide
நிலம் தேவா, Nilam Devaa - பூமிதேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால், Irukku Aar Mozhiyal - வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை, Neri Izhakkamaai - முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர், Ulaku Alandha Thiruthal Thunai Vananghuvar - உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும், Yaamum - நாமும்
அவா ஒருக்கா, Ava Orukka - (எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து, Vinaiyodum Emmodum Nondhu - (அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக்கொண்டு
கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள்போல, Kani Inmaiyin Karukkai Nadippavargalpol - பழம்  கிடைக்காமையாற் பிஞ்சைத்தின்பவர் போல
திருநாமம் சொ£ல் கற்றனம், Thirunamam Sol Kattranam - (பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.