திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2542 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2542திருவிருத்தம் || 65
கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம் உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.
பதவுரை Show / Hide
கன்று பிணை, Kandru Pinai - இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின், Malar Kannin - பரந்த கண்களின்
குலம், Kulam - சாதியை
வென்று, Vendru - ஜயித்து
ஒரே கருமம் உற்று, Ore Karumam Utru - ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று, Payinru - அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி, Seviyodu Usavi - (அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த, Utrum Uraadhum Milirndha - (எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய், Kan Aay - கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ், Ulagam Ellam Mutrum Vizhungi Umizhndha Piraanar Thiru Adi Keel - எல்லாவுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற, Emmai Unarghindra - எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.