திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2543 | திருவிருத்தம் || 66 | உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே. | பதவுரை Show / Hideஎரி, Eri - அக்நியும் (- (எம்பெமான் தனது எம்பெருமானுடைய)) நீர், Neer - ஜலமும் வளி, Vali - வாயுவும் வான், Vaan - ஆகாசமும் மண், Man - பூமியும் ஆகிய, Aagiya - என்னும் பஞ்சபூதங்களின் வடிவமான காலிகள், Kaaligal - செங்கழுநீர்ப்பூக்காளனவை உண்ணாது, Unnaathu - உண்ணாமலும் உறங்காது, Urangaatu - தூங்காமலும் உணர்வு உறும், Unarvu Urum - (எப்பொழுதும் த்யாகரூபமான) ஞானத்திற் பொருந்தின வைகுந்தம் அன்னான், Vaikundham Annan - ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய கண் ஆய், Kan Aay - கண்களென்று பேராய் அரு வினையேன் உயிர் ஆயின, Aru Vinaiyen Uyir Aayin - தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர்நிலையான எத்தனை யோகியர்க்கும், Ethanai Yogiyarkkum - மிக்க யோகநிலையையுடைய முனிவர்க ளெல்லோர்க்கும் எண் ஆய், En Aayi - (அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத்தக்கவையாய் மிளிரும், Milirum - பிறழ்ந்து தோன்றுகிற இயல்வின் ஆம், Iyalthin Aam - தன்மையையுடையவையாம். |