திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2544 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2544திருவிருத்தம் || 67
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர்செற்ற மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர் தூவியம் பேடையன் னாள்கண்க ளாய துணைமலரே.
பதவுரை Show / Hide
அசுரை, Asurai - அசுரர்களை
செற்ற, Settra - அழித்த
மா விய புள் வல்ல, Maa Viya Pul Valla - பெரிய ஆச்சர்யகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற
மாதவன், Maadhavan - திருமகன் கணவனும்
துணை மலர், Thunai Malar - ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும், Kaaviyum - செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும், Neelamum - கருநெய்தற் பூவைய|ம்
வேலும், Velum - வேற்படையையும்
பலபல, Palapala - (மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன், Govindan - பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம், Vengadam - திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னான், Thuvi Ambeidai Annan - சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய், Kankal Aayi - கண்களாகிய
வென்று, Vendru - தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு, Paarippu - என்னை வருத்துவதற்கு அடிகோலிய பரப்பு
ஆவியின் அல்ல, Aaviyin Alla - (எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல, Alavu Alla - ஏற்ற அளவல்ல.