திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2545 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2545திருவிருத்தம் || 68
மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும் புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ் நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய் கலந்தார் வரவெதிர் கொண்டுவன் கொன்றைகள் கார்த்தனவே.
பதவுரை Show / Hide
பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலைமோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம், Nilam - பூலோகத்தை
தாவிய, Thaaviya - அளந்தருளின
எம்பெருமான் தனது, Emperumaan Thanathu - எம்பெருமானுடைய
வைகுந்தம், Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய், Annai - ஒத்துவிளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர்கொண்டு, Kalandhaar Varavu Edhirkondu - (உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள், Val Konraigal - வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனை, Kaarthanai - கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும், Maalaiyum - மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும், Maalai Pon Vaasikayum - பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழைபந்தர், Pulam Thoi Thazhaipandhar - மநோஹரமான தழைகளர் சிறு பந்தலிலே
தண்டு, Thandu - கொம்புகளிலே
உற, Ura - நெருங்க
நாற்றி, Naatri - தொங்கவிட்டுக்கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில, Malarndhe Ozhindhila - முற்றும் மலர்ந்து விட்டனவில்லை