திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2547 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2547திருவிருத்தம் || 70
வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை உளைவான் புகுந்து இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே.
பதவுரை Show / Hide
வளை  வாய் திரு சக்கரத்து, Valai Vaai Thiru Chakkarathu - வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார், Engal Vaanavanar - எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல், Mudimeel - திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய், Thalaivai - கட்டுவாய்ந்த
நறு, Naru - பரிமளமுள்ள
கண்ணி, Kanni - மாலைவடிவமான
தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய
துழாய்க்கு, Thuzhaikku - திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான், Unnam Payalai Vilaivaan - (எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து, Miga Vandu - அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க, Naan Thingal Aandu Vazhi Nirka - நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து, Emmai Ulaivaan Pugundhu - எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல், Idhu Oru Gangul - இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே, Aayiram Oozhigalai - ஆயிரம் கற்பமாகா நின்றது.