திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2548 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2548திருவிருத்தம் || 71
ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம் பழங்கண்டு ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு அஃதேகொண்டன்னை நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும் தோழிக ளோ உரை யீர்எம்மை அம்மனை சூழ்கின்றவே.
பதவுரை Show / Hide
ஊழிகள் ஆய், Oozhigal Aay - காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான், Ulaku Ezhum Undaan - உலகமுழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம், Endrilam - என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) குறினோமில்லை.
களா பழம் கண்டு, Kala Pazham Kandu - களாப்பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு, Pazham Vannam Aazhi Endraerku - ‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று (குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு, Ahdhe Kondu - அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை, Annai - (எனது) தாய்
இவளோ நாழ் என்னும், Ivaloo Naazh Ennum - ‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி) சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும், Gyaanam Undaan Vannam Sol Vitrru Ennum - உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ, Thozhigaloo - தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற, Emmai Ammnai Soozhkindra - எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர், Uraiyeer - நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்