திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2550 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2550திருவிருத்தம் || 73
வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும், பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம் போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும் சால்பின் தகைமைகொ லாம்தமி யாடி தளர்ந்ததுவே.
பதவுரை Show / Hide
விண், Vin - ஆகாயத்தில் நின்று (- (வென் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய))
வால் வெள் நிலவு, Vaal Vel Nilavu - மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால், Paal - பாலை
உலகு ஆர சுரக்கும், Ulaku Aara Surakkum - உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
சுரவி, Suravi - பசுவினது
சுர, Sura - சுரம்பு
முதிர், Mudir - மிகப்பெற்ற
மாலை, Maalai - மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது, Thamiyatti Thalarnthathu - (நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்ததன்மை
பரிதிவட்டம் போலும், Paridivattam Polum - இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி, Adal Azhi - வலிய சக்கராயுதமுடைய
பிரான், Piraan - அத்தலைவன்
ஏழ்பொழில், Ezhalpozhil - ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம், Alikkum Salpin Thamaikai Kol Aam - ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?