திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2551 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2551திருவிருத்தம் || 74
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண் வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக் கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய் அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்தோ! வந்துலாகின்றதே.
பதவுரை Show / Hide
தளர்ந்தும்  முறிந்தும் வருதிரை, Thalarndhum Murindhum Varuthirai - (கொந்தளித்து  விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும் காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல், Payal - (ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும், Thirunedu Kan Valarnthum - அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும், Arivutrum - (அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும், Vaiyam Vizhungiyum - பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான், Malvaraiyai Kilarndhu Marithara Theendu Eduththan - கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய், Mudichoodu Thuzhai - திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன், Alaindhu Un - அளாவியுண்ட
பசு சிறு தென்றல், Pasu Siru Thendral - புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது, Andho Vandhu Ulaakindrathu - மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.