திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2553 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2553திருவிருத்தம் || 76
இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய், வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின் தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.
பதவுரை Show / Hide
இடம்போய் விரிந்து, Idampoi Virinthu - எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான், I Ulagu Alandhaan - இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர், Ezhil Aar - அழகு நிறைந்த
தண், Than - குளிர்ந்த
துழாய்போது வடம், Thuzhaipothu Vadham - திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும், Inaiyum - வருந்துகிற
மட நெஞ்சமே, Mada Nenjamai - பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது, Viyal Thaamaraik Kadhapothu - சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க, Odunga - குவிய
மேல் ஆம்பல், Mel Aambal - புல்லிய ஆம்பலை
அலர்விக்கும், Alarvikkum - அலரச் செய்கிற
வெள் திங்கள், Vel Thingal - வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது, Nangal Velvanaykke Vadham Pol Virithal Ithu - நமது வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே, Viyappe - ஓர் ஆச்சரியமோ?