திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2554 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2554திருவிருத்தம் || 77
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.
பதவுரை Show / Hide
திங்கள், Thingal - பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை, Ambillai - அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப, Pulamba - (தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட, Chengol Than Arasupatta - சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம், Chem Kalam - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி, Patri - அடைந்து
நின்று, Ninru - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு, Enku - வருந்துகிற
புல்மாலை, Pulmalai - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை, Thenpal Ilangai - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த, Vem Kalamseitha - கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார், Nam Vinnor Piranar - நமது வோதி தேவனான தலைவனது
துழாய், Thuzhai - திருத்துழாயை
துணை ஆ, Thunai Aa - தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்ககளை மாமை கொள்வான், Nangagalai Mamaik Kolvvan - நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது, Vandhu Thondri Nalikinrathu - எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது