திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2555 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2555திருவிருத்தம் || 78
நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோள்துணித்த வலியும் பெரு மையும் யாஞ்¦ சால்லும் நீர்த்தல்ல, மைவரைபோல் பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.
பதவுரை Show / Hide
நலியும்நரகனை வீட்டிற்றும், Naliyumnarakkanai Veetirum - (உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும் (- (எமது நாயகனார்))
வாணன் திண்தோள் துணிந்த வலியும், Vaanan Thinthol Thunindha Valiyum - பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும், Perumaiyum - (அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல, Yaam Sollum Neerthu Alla - (எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார், Mai Varaipol Poliyum Uruvin Piraanaar - அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே, Punar Poodhuzhai Malarkke - சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப்பெறுவதற்காகவே
மெலியும், Meliyum - ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார், Mada Nenjinaar - (எமது) பேதைநெஞ்சு
தந்து போயின, Thandu Poyina - (தான் எம்மைவிட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்துவிட்டுப் போனவை
வேதனை, Vedhanai - இத் துன்பங்கள்.