திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2556 | திருவிருத்தம் || 79 | வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே. | பதவுரை Show / Hideவேதனை, Vedhanai - வேதம் வல்லவனும் வெள் புரி நூதனை, Vel Puri Noodhanai - சுத்தமான யஜ்னோபவித முடையவனும் விண்ணோர் பரவ நின்ற சாதனை, Vinnor Parava Nindra Saadhanai - மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும் ஞானலம் விழுங்கும் அநாதனை, Gnaanalam Vizhungum Anaadhanai - (பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும் ஞாலம் தத்தும் பாதனை, Gnaalam Thathum Paadhanai - உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும் பால் கடல் பாம்பு அணைமேல், Paal Kadal Paambu Anaimeel - திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல் பள்ளி கொண்டு அருளும், Palli Konda Arulum - யோக நித்திரை கொண்டருளுகிற சீதனையே, Seethanaiye - குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே தொழுவார், Thozhuvaar - இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர் விண் உளாரிலும் சீரியர், Vin Ulaarilum Seeriyar - பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர். |