திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2557 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2557திருவிருத்தம் || 80
சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த, பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த பேரர சேஎம் விசும்பர சேஎம்மை நீத்துவஞ்சித்த ஓரர சேஅரு ளாய்,இரு ளாய்வந் துறு கின்றதே.
பதவுரை Show / Hide
சீர் அரசு ஆண்டு, Seer Arasu Aandu - சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ, Than Chengol Sila Naan Seleei I - தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த, Kazhintha - பின்பு இறந்தொழிந்த
பார் அரசு, Paar Arasu - ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து, Ottu - போன்று
ஞாயிறு, Nyaayiru - ஸூர்யன்
மறைந்து, Maraindhu - அஸ்தமித்தான்;
பார் அளந்த, Paar Alandha - உளகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே, Peer Arase - சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே, Em Visumbu Arase - பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த, Emmai Neethu Vanchiththa - எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே, Oor Arase - ஒப்பற்ற நாதனே!
அருளாய், Arulai - (இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது, Irul Aay Vandhu Koorrugindrathu - இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது.