திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2558 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2558திருவிருத்தம் || 81
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப் பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த் துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே!
பதவுரை Show / Hide
ஓர்ப்பு இலர் ஆண், Oorppu Ilar Aan - (இவளுக்கு நேர்ந்துள்ள கோயில் தன்மையையும் அதன் காரணத்தையும் அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற, Koorrugindr - (இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள், Kanmakal - (வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன, Melan - மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர், Ivazhai Perugindra Thaayar - இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல், Mei Nonthu Peraar Kol - உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ?
குழல்வாய், Kuzhalvaai - (இவளது) கூந்தலிலே
துழாய், Thuzhai - (எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர், Koorrugindrilar - சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம், Thollai Vengadam - பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும், Aattavum - இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர், Sozhgindrilar - ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம், Ival Aagam - இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள, Mel Aavi Eri Kollu - மென்மையான உயிரை விரஹித்தீக் கவர்ந்துகொள்ளும்படி
இறுகின்றது, Irugindrathu - முடிகறிவளவாகா நின்றது.