திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2560 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2560திருவிருத்தம் || 83
விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை, முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர் கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் தளரில்கொலோ வறியேன்,உய்ய லாவதித் தையலுக்கே.
பதவுரை Show / Hide
விளரி, Vilarai - விளரியென்னும் இசையையுடைய (- (இவ்வாற்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு))
குரல், Kural - குரலையுடைய
அன்றில், Anril - அன்றிற்பறவை
மெல் பெடை, Mel Pedai - மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை, Moondril Pennai Mulari Kurambai - முன்வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் அவியும், Mel Aviyum - (இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும், Naiyum - (உடம்பின் ) இளைப்பும்
எல்லாம், Ellam - என்னும் இவையாவும்
இது இது ஆக, Idhu Idhu Aaga - இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும், Mugilvannan Peer Kilari Kilari Pithatrum - காயமேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை (வலியின்மையால் வருந்தியெடுத்தெடுத்துக் கூறி வாய்பிதற்றும் படியான
தளரின் கொலோ, Thalarin Koloo - முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு, I Thayalukku - இம்மகளுக்கு
உய்யல் ஆவது, Uyyaal Aavathu - (அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன், Ariyyeen - அறிகிறேனில்லை.