| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2564 | திருவிருத்தம் || 87 | புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும் , பூங்கழிபாய்ந் தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின் வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம் சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே? | திருமால், Thirumaal - பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே! புலம்பும், Pulambum - (விரஹவேதனையால்) கத்துகிற கன குரல், Kana Kural - கனத்த குரலையுடைய போழ் வாய் அன்றிலும், Pozh Vaai Andrilum - பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும் பூ கழி பாய்ந்து அலம்பும், Poo Kazhi Paayndhu Alambum - அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற கன குரல், Kana Kural - கம்பீரமான தொனையையுடைய சூழ் திரை ஆழியும், Sool Thirai Azhiyum - சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய ஆங்கு அவை, Aangu Avai - அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த வஸ்துக்களானவை. நின் வலம்புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக, Nin Valambulladhu Nalam Paadum Ithu Kuttram Aaga - உனது வலிமையையுடைய கருடப்பறவையினது நன்மையை (இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக்கொண்டு வையம் சிலம்பும்படி, Vaiyam Silambumpadi - உலகத்தார் முறையிடும்படி இ திருவினை, I Thiruvinai - திருமகள் போன்ற இப்பெண்ணை செய்வதே, Seivadhe - துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?) |