திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2566 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2566திருவிருத்தம் || 89
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை, பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால் தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?
பதவுரை Show / Hide
தீ வினைக்கு அரு நஞ்சை, Thi Vinaikku Aru Nanjai - (அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை, Nal Vinaikku In Amudaththinai - (அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்
பூவின் மேவிய தேவி மணாளனே, Poovin Meviya Devi Manalane - தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை, Punmai En Kadhu Aavinai Meyakkumval Aayanai - சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று, Andru - முன்பொரு காலத்திலே
உலகு, Ulaku - உலகங்களை
இர் அடியால், Ir Adiyal - இரண்டு அடியாலே
தாவின ஏற்றை, Thavina Etrai - அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை, Emmanai - எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன், Ennanru Talaippeyvan - எப்பொழுதும் சேர்வேன்?