திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2567 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2567திருவிருத்தம் || 90
தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால், நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம் தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.
பதவுரை Show / Hide
அசுரர் குழாம், Asurar Kuzam - அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த, Tolaipeyta - அழிவைப் பண்ணின
நேமி, Nemi - சக்கராயுதத்தை யுடைய
எந்தாய், Entay - எம்பெருமானே!
யான், Yan - நான்
தலைப்பெய்து, Talaippeytu - (யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த, Nilaippu Eyta - நிலைப்பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு, Akkaikku - இவ்வுடம்பைப்பெறுதற்கு
நோற்ற, Norra - தவஞ்செய்த
இ மாயமும், I Mayamum - இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி, Un Tiru Ati - உனது திருவடித் தாமரை மலர்களை
குடும், Kutum - (எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால், Takaimaiyinal - அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும், Mayam Cevve Nilaippu Eytilata Nilaimaiyum - இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலைநின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு, Kantoru - நோக்குபோதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது, Tollai Uli Surunkalatu - பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)