திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2568 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2568திருவிருத்தம் || 91
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும் ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
பதவுரை Show / Hide
சுருக்கு உறி வெண்ணெய், Surukku Uri Venney - சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட, Totu Unda - வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை, Kalvanai - கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும், Vaiyam Murrum - உலக முழுவதையும்
இரு குறள் ஆகி, Iru Kural Aagi - மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய, Isaiya - (அவன்தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி, Or Moo Adi Vendi - ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட, Orungu Uru Unda - ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெருவபிற்றாளனை, Peruvapirtraalanai - பெரிய திருவயிற்றையுடையவனும்
மாவலி மாட்டு, Maavali Maatu - மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற, Sendra - எழுந்தருளின
பெரு சிறியானை அல்லால், Peru Siriyanaai Allaal - மிக்க தந்திரமுடையவனுமான திருமாலையல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது, Adiyen Nenjam Peanadhu - (அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.