திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2570 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2570திருவிருத்தம் || 93
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர் மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும் காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.
பதவுரை Show / Hide
காலை, Kaalae - உதய காலத்தில்
வெய்யோற்கு முன், Veyyoorku Mun - ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த, Ottuk Koduththa - நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர், Gangula Kurumbar - இருளாகிய சிற்றரசர்கள்
மாலை, Maalai - ஸாயங்காலத்திலே
வெய்யோன், Veyyon - அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட, Pada - அழிய
வையகம் பாவுவர், Vaiyagam Paavuvaar - (தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும், Anna Kandu - அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை, Kaalae - காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி, Nal Gyaanam Thurai Padinthu Aadi - நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் அழ்ந்து ஈடுபட்டு)
கண்போது செய்து, Kanbodu Seidhu - பக்தி பாரவசயத்தாலே கண்களை  மூடிக்கொண்டு
மாலை, Maalai - எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார், Nal Naavil Kollaar - (தங்களுடைய) நல்ல நாவினால் பெயர்கூறித் துதியார்;
அவன் மைபடி, Avan Maipadi - அவனது கரிய திருமேனியை
நினையார், Ninaiyaar - நினைப்பதற்கு செய்யார்.