திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2571 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2571திருவிருத்தம் || 94
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே, மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார், எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும் அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
பதவுரை Show / Hide
மை படி மேனியும், Mai Padi Meeniyum - நீலநிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும், Sem Thaamarai Kannum - செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையு முடைய
உன், Un - உனது
திரு அடி, Thiru Adi - திருவடித்தாமரை மலர்களை
வைத்திகரே, Vaiththikare - வைதிகர்கள்தாமே
மேய் படியால், Mei Padiyaal - உண்மையான நெறியால்
சூடும், Soodum - தம் தலைமேற்கொண் வணங்கும்படியான
தகைமையினார், Thagaimainaar - தன்மையுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி, Eppadi Oor A Milakka Kurudu A Milaiyum Ennum Appadi - எப்படி  (வெளியில் மேய்ந்துமீண்டு) ஊர்வந்து சேர்ந்த (கண்தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் கருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன், Yaanum Sonnen - யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன், Adiyen Mattu Yaathu Enban - அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?