திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2572 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2572திருவிருத்தம் || 95
யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும் மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால் யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும் மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.
பதவுரை Show / Hide
உயிர், Uyir - உயிரானது (- (அங்கு அவ்வுடம்பில்))
முன்னமே, Munname - நெடுநாளாகவே
மூது ஆவியில், Moothu Aaviil - பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்
யாது ஆனும் ஓர் ஆக்கையில், Yaathu Aanum Oor Aakkaiyil - யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு, Pukku - பிரவேசித்து
ஆம்புண்டும், Aampundum - கட்டுப்பட்டு நின்றும்
ஆப்பு அவிந்தும், Aappu Avindum - (அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும்
தடுமாறும், Thadumaarum - நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால், Adhanaal - ஆதலால்
யாது ஆனும் பற்றி, Yaathu Aanum Patri - எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும், Neengum Virathathai Nal Veedu Seyyum - (எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான
மாதாவினை, Maadhavinai - தாய் போன்றவனும்
பிதுவை, Pithuvai - தந்தை போன்றவனுமான
திருமாலை, Thirumaalai - ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன், Vananguvein - கரணமடைந்திருப்பேன்.