| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2574 | திருவிருத்தம் || 97 | எழுவதும் மீண்டே படுவதும் பட்டு, எனை யூழிகள் போய்க் கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால், இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய், தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும், உண்டோ கண்கள் துஞ்சுதலே? | எழுவதும், Ezhuvadhum - ஸூர்யன் உதிப்பதையும் மீண்டே படுவதும், Meende Padivadhum - மறுபடி அஸ்தமிப்பதையும் பட்டு, Pattu - இங்ஙனம் நிகழ்ந்து எனை ஊழிகள், Ennai Oozhigal - எத்தனையோ காலங்கள் போய் கழிதலும், Poi Kazhithalum - சென்று கழிவதையும் கண்டு கண்டு, Kandu Kandu - பார்த்துப் பார்த்து எள் கல் அல்லால், El Kal Allal - வருந்துதலே யல்லாமல் இமையோர்கள் குழாம், Imaiyorkal Kuzham - தேவர்கள் கூட்டம் தொழுவதும், Thozhivadhum - வணங்குவதையும் சூழ்வதும், Sozhvadhum - (பரிவாரமாக,) சூழ்ந்து கொள்வதையும் செய், Sei - செய்யப் பெற்று தொல்லை மாலை, Thollai Maalai - ஆதியந்தம் இல்லாதவனான திருமாலை கண் ஆரக் கண்டு, Kan Aarak Kandu - கண்கள் த்ருப்தி யடைய ஸேவித்து கழிவதோர் காதல் உற்றார்க்கும், Kazhivadhor Kaadhal Utrarkkum - (அவன் பக்கல்) மிக்க ஒரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும் கண்கள் துஞ்சுதல், Kangkal Thunzhuthal - கண்ணுறக்கம் கொள்ளுதல் உண்டோ, Undo - உள்ளதோ? (இல்லை என்ற படி.) |