திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2575 | திருவிருத்தம் || 98 | துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே. | பதவுரை Show / Hideதுஞ்சா முனிவரும், Thunjaa Munivarum - கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும் (- (இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்)) அல்லாதவரும், Allaadavarum - தேவர்கள் முதலிய மற்றையோரும் தொடர நின்று, Thodara Nindru - பின்பற்றி வழிபடநிற்பவனும் எஞ்சா பிறவி இடர் கடிவான், Enjaa Piravi Idar Kadivaan - (அடியார்களுடைய) குறைவற்ற பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும் தன் சார்வு இலாத, Than Saarvu Ilaadha - தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத தனிபெரும் மூர்த்தி தன், Thaniperum Moorthi Than - ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது. வெண்ªணேய் ஊண் என்னும் ஈனம் சொல், Vennaeney Oon Ennum Eenam Sol - வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழிசொல்லுக்கு இடமான மாயம், Maayam - ஆச்சரியம் செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது, Sevvae Nenjaal Ninaippu Aridhu - நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம். |