திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2576 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2576திருவிருத்தம் || 99
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும் ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர் வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும் ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே
பதவுரை Show / Hide
ஈனம் சொல் ஆயினும் ஆக, Eenam Sol Aayinum Aaga - (என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம், Eri Thirai Vaiyam Muttram - வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
எனத்து உரு ஆய் கிடந்த, Enathu Uru Aay Kidandha - வராஹமீர்த்தியாய்க் கோட்டாற் குத்தி யெடுதபுதுவந்த
பிரான், Piraan - தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும், Iru Karppagam Seer Vaanaththavarkkum - பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும், Allaadavarkkum - அவர்களலல்லாத மனிதர்கட்கும்
மற்றுஎல்லாயவர்க்கும், Mattru Ellaiyavarkkum - மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம், Gyaanam - அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால், Piranai Allal - தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை., Naan Kanda Nallathu Illai - நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.