திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2577 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2577திருவிருத்தம் || 100
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர் வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம் பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே
பதவுரை Show / Hide
நல்லார், Nallar - நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில், Navil - புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான், Kurugur Nagarayan - திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால், Thirumaal - லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர், Thiruper - திருநாமங்களை
நல்லார், Nallar - பயின்றவரான அடியார்களுடைய
அடி, Adi - திருவடிகளாகிற
கண்ணி, Kanni - பூமாலையை
சூடிய, Soodiya - தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன், Maran - நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த, Vinnappam Seitha - (பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல், Sol Ar Thodaiyal - சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும், I Noorum - இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார், Vallar - கற்றுவல்லவர்கள்
பிறப்பு ஆம், Pirappu Aam - ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை, Pollaa Aruvinai - கொடியவையாய்போக்க முடியாதவையான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல், Maayam Val Seeru Allal - கொடிய சேற்றின் அடர்த்தியையுடைய
பொய் நிலத்து, Poi Nilaththu - பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார், Azhundhaar - அழுத்தமாட்டார்கள் (முக்கிராகப் பெறுபவர்கள் என்றவாறு.)