| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2675 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1 | உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1 | என் மனனே, En manane - எனது மனமே! உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி உயர், Uyar - உயர்ந்த நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை. உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன் யவனவன், Yavanavan - யாவனொருவனோ மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும் அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன் யவனவன், Yavanavan - யாவனொருவனோ. அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ அவன், Avan - அந்த எம்பெருமானது துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை தொழுது, Thozhudhu - வணங்கி எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை. |