| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2676 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.) 2 | மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2 | மனனகம், Mananakam - மனத்திலே யிருக்கிற மலம் அற, Malam ara - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்) மலர், Malar - மலர்ந்ததாகி மிசை எழ தரும், Misai ezha tharum - மேலே மேலே விருத்தி யடைகிற மனன் உணர்வு, Manan unarvu - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால் அளவிலன், Alavilan - அளவிடப்படாதவனும் பொறி உணர்வு, Pori unarvu - (மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய் இனன், Inan - இப்படிப்பட்டவனும் முழு உணர் நலம், Muzhu unar nalam - பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும் எதிர் நிகழ் கழிவினும், Edhir nigazh kazhivinum - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும் இனன் இலன், Inan ilan - ஒப்பு இல்லாதவனும் மிகுநரை இலன், Migunarai ilan - மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன் என் நன் உயிர், En nan uyir - எனக்கு நல்ல ஆத்மா. |