| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2677 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.) 3 | இலனது உடையனிது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3 | அது இலன் (என), Adhu ilan (Ena) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும் இது உடையன் என, Idhu udaiyan ena - இந்தப் பொருளை யுடையவன் என்றும் நினைவு அரியவன், Ninaivu ariyavan - நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும் நிலன் இடை, Nilan idai - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும் விசும்பிடை, Visumbidai - ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள) உருவினன், Uruvinan - ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும் அருவினன், Aruvinan - ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும் புலனொடு, Pulanodu - விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்) புலன் அலன், Pulan alan - (தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும் ஒழிவு இலன் பரந்த, Ozhivu ilan parandha - எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே, A nalan udai oruvanai nanuginam naame - முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம். |