திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2679 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது.) 5 | அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5 | பதவுரை Show / Hideஅவர் அவர், Avar avar - அந்தந்த அதிகாரிகள் தம தமது, Tham thamadhu - தங்கள் தங்களுடைய அறிவு, Arivu - ஞானத்தாலே அறி, Ari - அறியப் படுகிற வகை வகை, Vagai vagai - பல பல படிகளாலே அவரவர், Avar avar - அந்தந்த தெய்வங்களை இறையவர் என, Iraiyavar ena - ஸ்வாமிகளென்றெண்ணி அடி அடைவர் தன், Adi adaivar than - ஆச்ரயிப்பர்கள்; அவரவர் இறையவர், Avar avar iraiyavar - அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள் குறைவு இலர், Kuraivu ilar - அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்) இறையவர், Iraiyavar - ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன் அவரவர், Avaravar - அந்தந்த அதிகாரிகள் விதி வழி, Vidhi vazhi - தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக அடைய, Adaiya - பலன் பெறும்படியாக நின்றனர், Nindranar - அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.) |