| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2680 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.) 6 | நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6 | நின்றனர், Nindranar - நிற்பவர்கள் இருந்தனர், Irundhanar - இருப்பவர்கள் கிடந்தனர், Kidandhanar - கிடப்பவர்கள் திரிந்தனர், Thirindhanar - திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே) நின்றிலர், Nindrilnar - நில்லாதவர்கள் இருந்திலர், Irundhilar - இராதவர்கள் கிடந்திலர், Kidandhilar - கிடவாதவர்கள் திரிந்திலர், Thirindilar - திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.) என்றும், Endrum - எப்போதும் ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர், Or iyalvinar en ninaivu ariyavar - ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;) என்றும், Endrum - எப்போதும் ஓர் இயல்வொடு நின்ற, Or iyalvodu nindra - ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய் எம் திடர், Em thidar - திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர். |