| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2684 | திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) ((பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.) 10 | பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக் கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10 | பரந்த, Parandha - எங்கும் வியாபித்த தண் பரவையுள், Than paravaiyul - குளிர்ந்த கடலினுள் நீர் தொறும், Neer thorum - ஜல பரமாணு தோறும் பரந்த அண்டம், Parandha andam - விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே இது என பரத்து உளன், Idu ena parathu ulan - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி) நிலம், Nilam - பூமியிலும் விசும்பு, Visumbu - மேலுலகங்களிலும் ஒழிவு அற, Ozhivu ara - ஒன்றொழியாமே கரந்த சில் இடம் தொறும், Karandha sil idam thorum - அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும் இடம், Idam - அவ் வவ் விடஙக்ளிலே திகழ், Thigazh - விளங்கா நின்ற பொருள் தொறும், Porul thorum - ஆத்ம வஸ்துக்கள் தோறும் கரந்து, Karandhu - (வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து எங்கும் பரந்து உளன், Engum parandhu ulan - எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;) இவை உண்ட கரன், Ivai unda karan - இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான். |