| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2690 | திருவாய்மொழி || எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில். உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹ லோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண் வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில். 5 | அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5 | பற்று அற்றது எனில், patru atradhu enil - விஷயாந்தர ஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே உயிர், uyir - ஆத்துமா வீடு உற்றது, veetu urratu - மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;) அது, adu - அந்தக் கைவல்ய மோக்ஷத்தை செற்று, setru - வெறுத்து மன்ன உறில், manna uril - நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில் அற்று, atru - (ஆச்ரயிக்கும் போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து இறை பற்று, irai patru - அந்த எம்பெருமானை பற்றுக |