திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2697 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2697திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.) 1
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-
பதவுரை Show / Hide
பத்து உடை, Pattu udai - பக்தியை யுடைய
அடியவர்க்கு, Adiyavarkku - அடியார்களுக்கு
எளியவன், Eliyavan - ஸுலபனாயும்
பிறர்களுக்கு, Pirarkalukku - மற்றையோர்களுக்கு
அரிய, Ariya - துர்லபனாயுமிருக்கிற
வித்தகன், Vitthakan - ஆச்சரிய பூதனும்,
மலர் மகள் விரும்பும், Malar magal virumbum - பெரிய பிராட்டியார் விரும்புதற் கீடானவனும்
பெறல் அரு, Peral aru - பெறுதற்கு அரியனுமான
நம் அடிகள், Nam adigal - நமது ஸ்வாமி
மத்து உறு கடை வெண்ணெய் களவினில், Matthu uru kadai vennay kalavinil - (யசோதைப் பிராட்டி) மத்தை யுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில்
உரம் இடை, Uram idai - மார்வினிடையிலே
ஆப்புண்டு, Appundu - கட்டுண்டு
உரலினோடு இணைந்திருந்து, Uralinodu inaindhirundhu - உரலோடு பொருந்தி இருந்து
ஏங்கிய, Aengiya - ஏங்கி யிருந்த
எளிவு, Elivu - எளிமைக் குணம்
எத்திறம், Etthiram - எப்படிப்பட்டது!