| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2698 | திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்) 2 | எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன் அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2- | நிலை வரம்பு இல பல பிறப்பு ஆய், Nilai varambu ila pala pirappu aay - ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பை யுடையனாய் முதல் இல கேடு இல முழு நலம், Mudhal ila kedu ila muzhu nalam - முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம் ஒளி வரும், Oli varum - ஒளி மல்கும்படியான எளி வரும் இயல்பினன், Eli varum iyalbinan - ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய் வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும், Veedu aam theli tharu nilaimai adhu muzhu vadhum - மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும் ஒழிவு இலன், Ozivu ilan - எப்போதும் உடையவனான இறையோன், Iraiyon - ஸ்வாமியானவன் அளிவரும் அருளினோடு அமைந்து, Alivarum arulinodu amainthu - அளித்த கிருபையோடே கூடி அகத்தனன், Agaththanan - (அடியவர்க்கு) அந்தரங்கனாய் புறந்தனன், Puranthanan - (மற்றையோர்க்கு) அணுகத் தகாதவனாயிருப்பன். |